LOADING...
ஸ்பாட்டிஃபை அறிமுகப்படுத்தும் புதிய வசதி, உங்கள் விருப்பப்படி அல்காரிதத்தை மாற்றலாம்!
ஸ்பாட்டிஃபை

ஸ்பாட்டிஃபை அறிமுகப்படுத்தும் புதிய வசதி, உங்கள் விருப்பப்படி அல்காரிதத்தை மாற்றலாம்!

எழுதியவர் Prasanna
Mar 15, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

மியூசிக் ஸ்டிரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை, பயனர்கள் தங்கள் இசை ரசனையை தாங்களே எடிட் செய்து, பரிந்துரைகளைக் கட்டுப்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஸ்பாட்டிஃபை அல்காரிதம் நீங்கள் கேட்கும் பாடல்களை வைத்து தானாகவே பரிந்துரைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இனி, பயனர்கள் தங்கள் 'டேஸ்ட் ப்ரொஃபைலில்' உள்ள தரவுகளைப் பார்த்து, தங்களுக்குப் பிடிக்காத அல்லது தவறாகப் பதிவான இசை ரசனைகளை நீக்கவோ மாற்றவோ முடியும்.

ஸ்பாட்டிஃபை

இசை ரசனையை எடிட் செய்யலாம்

AI உதவியுடன் சாதாரண மொழியில் கட்டளைகளை வழங்குவதன் மூலம் (உதாரணமாக: "எனக்கு மெலோடி பாடல்கள் அதிகமாக வேண்டும்" அல்லது "இந்த ரகப் பாடல்களைக் குறைக்கவும்"), பயனர்கள் தங்கள் பரிந்துரைகளை மேம்படுத்தலாம். வீட்டில் குழந்தைகள் உங்கள் கணக்கில் பாடல்களைக் கேட்டாலோ அல்லது தற்செயலாக ஒருமுறை கேட்ட பாடல்கள் உங்கள் 'Discover Weekly' போன்ற பிளேலிஸ்ட்டுகளை ஆக்கிரமித்தாலோ, இனி எளிதாக அவற்றைச் சரிசெய்யலாம். இந்த வசதி தற்போது நியூசிலாந்தில் உள்ள 'ப்ரீமியம்' சந்தாதாரர்களுக்கு பீட்டா (Beta) பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Advertisement