LOADING...
ஹார்முஸ் ஜலசந்தியில் கடலடியில் உள்ள இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்?
கடலடி இணைய கேபிள்கள் தற்போது போர்முனையாக மாறியுள்ளன

ஹார்முஸ் ஜலசந்தியில் கடலடியில் உள்ள இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2026
01:23 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் 'டிஜிட்டல் நரம்புகள்' எனப்படும் கடலடி இணைய கேபிள்கள் தற்போது போர்முனையாக மாறியுள்ளன. "போர் நடக்கும் பகுதிகளில் பழுதுபார்க்கும் கப்பல்கள் செயல்படாது. ஒருமுறை கேபிள் துண்டிக்கப்பட்டால், அதைச் சரிசெய்ய வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் ஆகலாம்," எனத் தொலைத்தொடர்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது வரை இணையச் சேவைகள் வழங்கப்பட்டாலும், பாதுகாப்பு சூழல் மிக மோசமாக உள்ளது. அப்படி இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், உலக பங்கு சந்தை, வங்கி பரிவர்த்தனைகள் என பல சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது.

முக்கியத்துவம்

ஏன் இந்த கேபிள்கள் முக்கியம்?

உலகளாவிய தரவு பரிமாற்றம்: மின்னஞ்சல்கள், வீடியோ கால்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் AI சேவைகள் என உலகின் 95% இணைய தரவுகள் இந்த மெல்லிய கேபிள்கள் மூலமே பரிமாறப்படுகின்றன. செங்கடல் வழித்தடம்: ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் 17 முக்கிய கேபிள்கள் செங்கடல் வழியாகச் செல்கின்றன. பாரசீக வளைகுடா: AAE-1, FALCON, மற்றும் டாடா-TGN கல்ஃப் போன்ற கேபிள்கள் இந்தியாவின் சர்வதேச இணையத் தொடர்பிற்கு முதுகெலும்பாக உள்ளன.

அச்சுறுத்தல்கள்

தற்போதைய அச்சுறுத்தல்கள்

1. கடல் கண்ணிவெடிகள்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை விரித்துள்ளதால், கேபிள்களைப் பழுதுபார்க்கும் கப்பல்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2. ஹூதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் கப்பல்களைத் தாக்குவதால், அங்குள்ள கேபிள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது. 3. திட்டமிட்ட தாக்குதல்: ஈரான் தனது 'அண்டர்வாட்டர்' குழுக்கள் மூலம் வேண்டுமென்றே கேபிள்களைத் துண்டித்தால், அது உலகளாவிய பொருளாதாரப் பேரழிவிற்கு வழிவகுக்கும்.

Advertisement

பாதிப்பு

இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்

இந்தியாவின் மேற்கு நோக்கிய இணையப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த வளைகுடா பகுதி வழியாகவே செல்கிறது. கேபிள்கள் துண்டிக்கப்பட்டால், இணைய வேகம் பெருமளவு குறையும். சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைகள் (SWIFT போன்றவை) பாதிக்கப்படும். அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் தரவு மையங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.

Advertisement