ரூ.100 கோடி மதிப்புடைய பிட்காயின்களை பரிவர்த்தனை செய்த பூட்டான்
செய்தி முன்னோட்டம்
பூட்டான் அரசானது 11.85 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய, அதானது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.98 கோடி மதிப்புடைய பிட்காயின்களை பரிவர்த்தனை செய்துள்ளது. சர்வதேச அளவில் அதிகளவிலான பிட்காயின்களை வைத்திருக்கும் நாடுகளில் ஏழாவது இடத்தில் இருக்கிறது பூட்டான். 2019ம் ஆண்டில் இருந்தே பிட்காயின் மைனிங்கிலும் பூட்டான் அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிட்காயின்களை மைனிங் செய்வதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். பூட்டான் அரசு நீர்நிலைகள் மூலம் உற்பத்தி செய்யும் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை பிட்காயின் மைனிங்கிற்காகப் பயன்படுத்திக் கொண்டது.
பிட்காயின்
பூட்டான் பிட்காயின் பரிவர்த்தனை
தற்போது 175 பிட்காயின்களை பரிவர்த்தனை செய்துள்ளது அந்நாட்டு அரசு. இந்த பரிவர்த்தனையானது பூட்டானின் அதிகாரப்பூர்வ முதலீட்டு அமைப்பான ட்ரக் ஹோல்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிகளவில் பிட்காயின்களை பரிவர்த்தனை செய்தே வருகிறது பூட்டான். 2024ல் சுமார் 13,000 பிட்காயின்களைக் கைவசம் வைத்திருந்தது அந்நாடு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம் பரிவர்த்தை செய்த பின்பு 5,400 பிட்காயின்களையே கைவசம் வைத்துள்ளது. இன்றைக்கு ஒரு பிட்காயின் ரூ.65 லட்சம் என்ற விலையில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.