Page Loader
தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் 
தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல உலகின் சில பாதுகாப்பான நகரங்கள்

தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 27, 2023
02:46 pm

செய்தி முன்னோட்டம்

தனியாக சுற்றுலா செல்வது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவம் தான். இது ஒரு இனம்புரியாத சுதந்திர உணர்வையும், தன்நம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், பலரும் தனியே சுற்றுப்பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானதா என யோசிப்பதால், உலகில் உள்ள பாதுகாப்பான நகரங்கள், குறிப்பாகப் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இதோ: சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள், ஊழலற்ற காவல்துறை ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும். இங்கே பன்முக கலாச்சாரம் கொண்ட மக்கள் வசிப்பதால், நீங்கள் ரசிக்க பல இடங்கள் உண்டு. ஜப்பான்: Global Peace Index(GPI)படி, ஜப்பான், உலகின் ஆறாவது மிக அமைதியான நாடு. ஆயிரக்கணக்கான வருட பாரம்பரியம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைந்திருக்கும் ஒரு சுற்றுலாத்தலம்.

card 2

பாதுகாப்பாக சுற்றுலா செல்ல ஏற்ற நகரங்கள் 

நியூசிலாந்து: சாகசம், விளையாட்டு, இயற்கை என அனைத்து ரசனைகளும் ஏற்ற நகரம் நியூசிலாந்து. இந்த சிறிய நாடு, மிகவும் மாறுபட்ட நிலப்பரப்புகளுடன் கூடிய இரண்டு முக்கிய தீவுகளும் உள்ளடக்கியுள்ளது. நாட்டின் மக்களும், மிகவும் நட்புணர்வுடன் சுற்றுலாவாசிகளை அணுகுவதில், உங்கள் பயணம் மேலும் எளிதாகும். இது உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அயர்லாந்து: அயர்லாந்தில் வானிலை சிறப்பாக இல்லாவிட்டாலும், பெண்களுக்கு எதிரான பாரபட்சம், பாலின அநீதி மற்றும் வன்முறைகள் மிகவும் குறைவு. அயர்லாந்தின் அற்புதமான நிலப்பரப்புகள், வரலாறு, அழகான கடற்கரைகள், அற்புதமான நகரங்கள் மற்றும் மாறும் கலாச்சாரம் ஆகியவற்றிற்காக மக்கள் அயர்லாந்தை விரும்புகிறார்கள்.