Page Loader
டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை
96 மணி நேரத்திற்கு பிறகும் அவர்களை அமெரிக்க மற்றும் கனட கடற்படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை

எழுதியவர் Sindhuja SM
Jun 26, 2023
05:18 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த சுலேமான் தாவூத் என்ற 19 வயது இளைஞன், கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ரூபிக்ஸ் கியூபை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாயார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தனது மகன் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், கடலுக்கடியில் ரூபிக்ஸ் கியூபை தீர்க்கும் போது அதை படம் பிடிக்க கேமராவை எடுத்து சென்றதாகவும் சுலேமான் தாவூத்தின் தாயார் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் வட அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது, கடலுக்கு அடியில் நசுங்கியது. உள்நோக்கி வெடித்தல்(Implode) என்று கூறப்படும் இந்த நசுங்குதல் கடலுக்கு அடியில் இருக்கும் அதிக அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஞ்சாங்க

"3,700-மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போகிறேன்": சுலேமான்

இந்த நீர்மூழ்கியில் பயணித்த 5 பேரை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு 4 நாட்கள் தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வந்தது. ஆனால், 96 மணி நேரத்திற்கு பிறகும் அவர்களை அமெரிக்க மற்றும் கனட கடற்படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள் அதற்கு மேலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அதனால், சுலேமான் தாவூத், அவரது தந்தை உட்பட அந்த நீர்மூழ்கியில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்திருக்கும் சுலேமானின் தாயார், "டைட்டானிக் கப்பலில், 3,700-மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போகிறேன்" என்று தன்னிடம் தன் மகன் கூறியதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.