Page Loader
உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள்
சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்திய உணவகங்கள்

உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 26, 2023
01:41 pm

செய்தி முன்னோட்டம்

உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு வகையான சமையல் முறைகளின் மூலம், பல்வேறு வகையான சுவைகளில், உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. மனிதன் நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்ட பிறகு, உணவை சமைக்கும் முறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு இன்று ஆயிரக் கணக்கான உணவு வகைகள் உலகெங்கும் சமைக்கப்படுகின்றன. இந்நிலையில், உலகில் பல்வேறு சுவைகளைப் பறிமாறும் உணவகங்களில் சிறந்த 150 உணவகங்களின் பட்டியலை ஒரு சோதனை முயற்சியாக வெளியிட்டிருக்கிறது டேஸ்ட் அட்லஸ் என்ற உணவுத்தளம். இந்தப் பட்டியலில் இந்தியாவின் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்ந்த ஏழு உணவகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் தலைசிறந்த உணவகங்களின் பெயர்களுடன், அந்த உணவகங்களில் தயாரிக்கப்படும் சிறந்த சுவை கொண்ட உணவின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறது டேஸ்ட் அட்லஸ்.

உணவு

பட்டியலில் இடம்பெற்ற இந்திய உணவகங்கள்: 

இந்தப் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்திருக்கிறது கேரளாவின் கோழிக்கோடைச் சேர்ந்த 'பராகன்' உணவகம். 1939-ல் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில், கேரளாவில் கிடைக்கக்கூடிய சமையல் பொருட்களைக் கொண்டு மிகவும் பாரம்பரிய முறையில் சமைக்கப்படும் கேரள ஸ்டைல் பிரியாணி மிகவும் ஸ்பெஷல். இதனைத் தொடர்ந்து, லக்னோவைச் சேர்ந்த டன்டே கபாபி உணவகம், 12-வது இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த பீட்டர் கேட் உணவகம், 17-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. முர்தல் நகரில் உள்ள அம்ரித் சுக்தேவ் தாபா, பெங்களூருவைச் சேர்ந்த மாவளி டிபன் ரூம்ஸ், டெல்லியில் உள்ள கரிம்ஸ் மற்றும் மும்பையில் உள்ள ராம் ஆஷ்ரயா ஆகிய உணவகங்கள், மேற்கூறிய சிறந்த உணவகங்களின் பட்டியலில், முறையே, 23, 39, 87 மற்றும் 112 ஆகிய இடங்களைப் பிடித்திருக்கின்றன.

Instagram அஞ்சல்

உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியல்: