நடிகை அசினின் திருமண வாழ்க்கையில் விரிசலா? இணையத்தில் கசிந்த புதுத்தகவல்
'எம்.குமரன்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். தொடர்ந்து போக்கிரி,கஜினி என பல வெற்றி படங்களில் நடித்தவர், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார். அழகு, நடனம், நடிப்பு, சொந்த குரலில் டப்பிங் என சினிமாவிற்கு தேவையான அனைத்துமே அசினுக்கு அத்துப்படி. திறமையான நடிகர் என பெயர் பெற்ற அசின், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும், அமீர் கான், சல்மான் கான் என ஒரு சில நடிகர்களுடன் வெகுசில படங்கள் நடித்துவிட்டு, கடந்த 2016 -ஆம் ஆண்டு, மைக்ரோமாக்ஸ் என்ற செல்போன் நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமண புகைப்படங்களை நீக்கிய அசின்
திருமணம் ஆனதும், சினிமாவை விட்டு ஒதுங்கிய அசினுக்கு, ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் புகைப்படங்களை மட்டும் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றும் அசின், சமீபத்தில், தனது திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவரது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அசினின் கணவர் ராகுலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தெரிந்ததும், அவரிடம் இருந்து விவாகரத்து பெற அசின் முடிவெடுத்துள்ளதாகவும், தற்போது அவர் தனது தந்தை வீட்டில், கேரளாவில் வசிப்பதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த அசினின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.