
'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
கனடாவைச் சேர்ந்த தப்பியோடிய குற்றவாளியும் ரவுடியுமான கோல்டி பிரார் மீண்டும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
'கோல்டி பிரார்' என்று அழைக்கப்படும் சதீந்தர் சிங் பிரார் கனடாவில் தேடப்பட்டு வரும் டாப் 25 குற்றவாளிகளில் ஒருவராவார்.
இந்த வருட தொடக்கத்தில், சல்மான் கானுக்கு இதே போல கொலை மிரட்டல் விடுத்ததற்காக ரவுடிகள் கோல்டி பிரார், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ஒருவர் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்தியாவின் பஞ்சாப்பை பூர்விமாக கொண்ட லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலை ஒரு கொலை வழக்கில் கனடியன் மவுண்டட் காவல்துறையும் தேடி வருகிறது.
டக்ஜ்
"சல்மான் கான் தான் எங்கள் இலக்கு": கோல்டி பிரார்
2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் கனடா சென்றடைந்த லாரன்ஸ் பிஷ்னோய்(29), மே 29, 2022 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலாவின் கொலைக்கு பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, கனடாவின் காவல்துறையும் இந்தியாவின் காவல்துறையும் அவரை தேடி வருகிறது.
இந்நிலையில், இந்தியா டுடே சேனலுக்கு கோல்டி பிரார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர், "சல்மான் கானை நிச்சயமாக எங்கள் குழு கொன்றுவிடும். நாங்கள் அவரைக் கொல்வோம். நிச்சயமாக அவரைக் கொல்வோம். பாய் சாகேப்(லாரன்ஸ்) இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார். பாபா கருணை காட்ட வேண்டும் என்று தோன்றும் போது மட்டுமே கருணை காட்டுவார்." என்று தெரிவித்திருக்கிறார்.