Page Loader
மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு 
மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு

மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு 

எழுதியவர் Nivetha P
Jun 27, 2023
01:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா நாட்டில் உள்ள மாநில அரசுகளுக்கு மூலதன செலவினங்களுக்கு ஊக்குவிக்க, மூலதன முதலீட்டிற்கென "மாநிலங்களுக்கு சிறப்பு உதவி புரியும் திட்டம்" என்னும் புதிய திட்டமானது 2023-24ம் ஆண்டின் நிதிநிலை திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, அனைத்து மாநில அரசுக்கும் 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படவேண்டும். அதன்படி, தற்போதைய நடப்பாண்டில் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ரூ.1.3 லட்ச கோடி கடனை வழங்குவதாக திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்த திட்டமானது அரசு வாகனங்கள் மற்றும் கடன்களுக்கான வகை, நகர்ப்புற சீர்திருத்தங்கள், மேக்-இன்-இந்தியா, வளரிளம் பருவத்தினரின் நலன், வரிகளில் மாநிலங்களுக்கான பங்குகள், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 8 பகுதிகளை உள்ளடக்கியதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிதி 

16 மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சக செலவினத்துறை நிதி வழங்க ஒப்புதல் 

இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சக செலவினத்துறை ரூ.56,415 கோடி நிதியினை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி நிதியானது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிதியினை மாநில அரசு சுகாதாரம், நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி, நீர் வழங்கல், சாலைகள் மேம்பாடு பணிகள், பாலங்கள் மற்றும் ரயில்வே போன்ற துறைகளின் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இந்த சிறப்பு நிதியுதவி திட்டம் மூலம் ரூ.95,147.19 கோடி விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரூ.81,195.35 கோடி நிதி விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.