Page Loader
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
இந்திய-அமெரிக்க கூட்டு அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மில்லர் இதை கூறி இருக்கிறார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

எழுதியவர் Sindhuja SM
Jun 27, 2023
10:52 am

செய்தி முன்னோட்டம்

LeT, JuD போன்ற பயங்கரவாத குழுக்களையும், அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளையும் நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அமெரிக்கா தொடர்ந்து இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும். பரஸ்பர பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்" என்று கூறியுள்ளார். "லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்களையும் நிரந்தரமாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனங்க

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கடுமையாக கண்டித்த தலைவர்கள் 

பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டு அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மில்லர் இதை கூறி இருக்கிறார். இந்த கூட்டறிக்கையில், அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ்/டேஷ், லஷ்கர் இ-தய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM), மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட ஐ.நா-வில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக பாகிஸ்தான் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் வலியுறுத்தி இருந்தனர். மேலும், இரு தலைவர்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களைப் பயன்படுத்துவதை கடுமையாகக் கண்டித்தனர். இந்த அறிக்கைக்கு பதிலளித்திருந்த பாகிஸ்தான், இது ஒரு தரப்புக்கு மட்டும் சார்பாக இருக்கிறது என்றும், இது தவறாக வழி நடத்தும் கருத்து என்றும் கூறியிருந்தது.