NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா
    இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் 3-டோர் தார்

    ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 27, 2023
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியான 5-டோர் ஜிம்னியை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.

    தற்போது இந்த 5-டோர் ஜிம்னிக்கு இந்தியாவில் நேரடிப் போட்டியாக எந்த மாடலும் விற்பனையில் இல்லை. இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி விற்பனையில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா மற்றும் ஃபோர்ஸ் நிறுவனங்கள் கூட, 3-டோர் எஸ்யூவி மாடல்களையே தற்போது விற்பனை செய்து வருகின்றன.

    5-டோர் ஜிம்னியின் வெளியீட்டிற்குப் பிறகு, தங்களுடைய தார் மற்றும் கூர்க்க மாடல்களின் 5-டோர் வெர்ஷன்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன மஹிந்திராவும், ஃபோர்ஸூம்.

    ஃபோர்ஸ் நிறுவனமானது, தங்களுடைய 5-டோர் கூர்க்கா மாடலை இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்துவரும் நிலையில், மஹிந்திரா நிறுவனம் தங்களுடைய தார் மாடலின் திரையை விலக்க முடிவு செய்திருக்கிறது.

    மஹிந்திரா

    மஹிந்திராவின் 5-டோர் தார்: 

    இந்தியாவின் முன்னணி எஸ்யூவியாக களத்திலிருக்கும் 3-டோர் தாரின், 5-டோர் வெர்ஷனை ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா.

    இந்த 5-டோர் மாடலில், தங்களின் மற்றொரு மாடலான ஸ்கார்ப்பியோ N மாடல் காரில் பயன்படுத்தப்பட்ட, 200hp பவர் மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினையே பயன்படுத்தவிருக்கிறது மஹிந்திரா.

    மற்றொரு டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் பட்டியலில் வைத்திருக்கிறது மஹிந்திரா. மேலும், இந்த புதிய 5-டோர் தாரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் வழங்கவிருப்பதாகத் தெரிகிறது.

    3-டோர் தாரை விட 5-டோர தாரானது ரூ.2.5 லட்சம் வரை கூடுதலான விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    எஸ்யூவி
    கார்

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா ஆட்டோமொபைல்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் கார்

    எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!  இந்தியா
    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  மாருதி
    இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!  புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா! ஹோண்டா

    கார்

    மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்: சொகுசு கார்கள்
    கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன? கியா
    புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்! எலக்ட்ரிக் கார்
    கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது! கியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025