போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் போதை பொருள் இல்லை என்னும் நிலையினை கொண்டுவர மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி தமிழகத்தில் 282 காவல் நிலையங்களில் போதைப்பொருள் இல்லை என்னும் நிலை உருவாகியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்நிலைய கட்டிடங்களை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " போதை பொருள்களின் விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறையினை சேர்ந்த 18 போலீசார் மற்றும் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவித்தார்.
காவல்துறை
தமிழகத்தில் 2021ம் ஆண்டில் 10 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்
தொடர்ந்து பேசிய அவர், "இதனுள் 10 பேரினை கைது செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் போதை பொருள்களின் நடமாட்டமானது பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது" என்றும் கூறினார்.
மேலும், முதன்முறையாக தமிழக காவல்துறை பணியிடங்கள் காலியாக இல்லை. 1 லட்சத்து 34 ஆயிரம் காவலர்களும், 15 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் பணியில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 2021ம் ஆண்டில் 10 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போது 3,700 காவலர்கள் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து, 1000 பேருக்கு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, 444 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.