கால்பந்து செய்திகள்

மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்ட நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல்!

ஹங்கேரியில் நடந்த யூரோபா கால்பந்து லீக் இறுதிப் போட்டியில் செவில்லாவிடம் ரோமா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போட்டியின் நடுவராக செயல்பட்ட அந்தோனி டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் புடாபெஸ்ட் விமான நிலையத்திற்கு சென்றபோது ரசிகர்கள் தாக்கினர்.

சவூதி புரோ லீக்கில் விளையாடுவதற்காக ரியல் மாட்ரிட்டில் இருந்து விலகும் பிரபல வீரர்!

பலோன் டி'ஓர் கோப்பையை வென்ற ஒரு வருடத்தில், ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கர் கரீம் பென்சிமா அணியிலிருந்து விலகும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அர்ஜென்டினா முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி கால்பந்து கிளப்பில் இருந்து வெளியேற உள்ளதாக அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.

பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : 23 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்டில் நடைபெறும் 2023 பிபா மகளிர் கால்பந்து உலக கோப்பையில் பங்கேற்கும் 23 பேர் கொண்ட வீராங்கனைகள் பட்டியலை இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மால்டா மற்றும் வடக்கு மாசிடோனியாவுக்கு எதிரான 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச் சுற்றுக்கான 25 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை மேலாளர் கரேத் சவுத்கேட் புதன்கிழமை (மே 24) அறிவித்தார்.

பார்சிலோனா கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விலகும் ஜோர்டி ஆல்பா!

ஜோர்டி ஆல்பா பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீசன் முடிவில் வெளியேறுவார் என்று கிளப் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

'உலகின் டாப் 5 லீக்குகளில் ஒன்றாக சவூதி புரோ லீக் மாறும்' : கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை!

போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி புரோ லீக் உலகின் டாப் ஐந்து லீக்குகளில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்!

ஞாயிற்றுக்கிழமை (மே 21) வலென்சியாவுக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியின்போது வினிசியஸ் ஜூனியர் ஒரு பிரிவு ரசிகர்களால் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்து, ரியல் மாட்ரிட் இனவெறிக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளது.

லியோனல் மெஸ்ஸி அபாரம்! ஐரோப்பிய லீக்கில் யாரும் எட்டாத சாதனை!

பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை (மே 21) இந்த சீசனில் தனது 20வது கோலையும், 20வது அசிஸ்டையும் பதிவு செய்தார்.

சீனாவில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த மாதம் பெய்ஜிங்கில் நடக்கும் நட்பு ஆட்டத்தில் விளையாட உள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்!

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பில் ஜோன்ஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறுகிறார்.

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : அபார சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி மேலாளர் பெப் கார்டியோலா!

மான்செஸ்டர் சிட்டியின் மேலாளர் பெப் கார்டியோலா யுஇஎப்ஏ கால்பந்து சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேகமாக 100 வெற்றிகளைப் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி!

அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்று 2ல் இந்திய மகளிர் கால்பந்து அணி ஜப்பான், வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளது.

பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன?

ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சனிக்கிழமை (மே 20) அன்று ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் பாரம்பரிய கால்பந்து கிளப்பான மோஹுன் பாகனின் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது.

எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!

ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை பெங்களூருவில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளன.

ஏடிகே மோஹுன் பாகன் கால்பந்து அணியின் பெயர் மாற்றம்! வெளியானது அறிவிப்பு!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து அணியான ஏடிகே மோஹுன் பாகன், ஜூன் 1, 2023 முதல் மோஹுன் பாகன் சூப்பர் ஜெயண்ட் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அந்த கிளப் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது.

ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அபாரம்! லா லிகா கோப்பையை கைப்பற்றியது பார்சிலோனா!

லா லிகா கால்பந்து தொடரில் எஸ்பான்யோலை 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்று தனது 27வது லா லிகா பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா!

வியாழன் (மே 11) அன்று தோஹாவில் உள்ள கட்டாரா ஓபரா ஹவுஸில் நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023 இல் பங்கேற்கும் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டன.

செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி!

கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக சவூதி ப்ரோ லீக்கில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது அல்-நாஸ்ர் கால்பந்து கிளப் அணி திங்களன்று (மே 8) ரியாத்தில் நடந்த போட்டியில் அல்-கலீஜிடம் 1-1 என டிரா செய்தது.

மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

33 ஆண்டுகளுக்கு பிறகு சீரி ஏ லீக் பட்டத்தை வென்ற நபோலி

உடினீஸ் கால்பந்து கிளப் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என டிரா செய்ததன் மூலம், சீரி ஏ லீக் 2022-23 தொடரை 33 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியின் நபோலி கால்பந்து கிளப் அணி கைப்பற்றியுள்ளது.

இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அடுத்த மாதம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023க்கான 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தார்.

ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோ ஊதியம்! சவூதி கால்பந்து கிளப்பிற்கு இடம் பெயரும் லியோனல் மெஸ்ஸி?

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி எஃப்சி பார்சிலோனாவில் தனது நேரத்தைக் குறைத்து, சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஹிலால் அணியுடன் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்தது பிஎஸ்ஜி கிளப்

லியோனல் மெஸ்ஸிக்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் இரண்டு வார தடை விதித்துள்ளது.

அகராதியில் சேர்க்கப்பட்டது கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயர்

கால்பந்து வரலாற்றில் ஜாம்பவானான பீலேவின் பெயர் தற்போது போர்த்துகீசிய மொழி அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர்

75 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜிரோனாவின் வாலண்டின் காஸ்டெல்லானோஸ் பெற்றுள்ளார்.

சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் 2023 : முதல் முறையாக பட்டம் வென்ற ஒடிஷா எப்சி

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஈஎம்எஸ் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெங்களூர் எப்சி அணியை வீழ்த்தி ஒடிஷா எப்சி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம்

முன்னாள் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) வெற்றியாளர் பெங்களூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரட்டை ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் தனது புதிய தலைமை பயிற்சியாளராக இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம்

2027 மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை இணைந்து நடத்துவதற்கான ஏலத்தை அமெரிக்காவும் மெக்சிகோவும் ஃபிஃபாவிடம் சமர்ப்பிப்பதாக அந்நாடுகளின் கூட்டமைப்பு புதன்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தது.

இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினென்டல் கோப்பை ஜூன் 9 முதல் 18 வரை புவனேஸ்வரில் நடைபெறவுள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம்

செல்சியா கால்பந்து அணி 2022-23 தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்டை நியமித்துள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.