
கண்ணீருடன் விடை பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி
செய்தி முன்னோட்டம்
19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புகழ்பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, 151 சர்வதேசப் போட்டிகளில், 94 கோல்களை அடித்ததன் பின்னர், கால்பந்து விளையாட்டிலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.
முன்னதாக கடந்த மே 16 ஆம் தேதி, சுனில் சேத்ரி தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் படி, கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற குவைத்துக்கு எதிரான FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்று, நேற்று, ஜூன் 6ஆம் நடைபெற்றது.
இதுவே அவரின் கடைசி போட்டியாகும். 39 வயதான சேத்ரி, 20 ஆண்டுகாலம் கால்பந்து ஆட்டத்திற்காக தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளார்.
சேத்ரி, 94 கோல்களுடன், சர்வதேச பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார்
#NEWSUPDATE || கண்ணீருடன் விடைபெற்றார் சுனில் சேத்ரி..! | #Sunilchhethri | #Football | #Retirement | #PolimerNews pic.twitter.com/anTZafIESa
— Polimer News (@polimernews) June 7, 2024