இந்தியாவின் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் குவைத்துக்கு எதிரான FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் ஜூன் 6 ஆம் தேதி தேசிய அணிக்காக அவர் தனது இறுதிப் போட்டியில் விளையாடுவார். 39 வயதான சேத்ரி, இந்தியாவுக்காக 145 போட்டிகளில் விளையாடி 93 கோல்களை அடித்துள்ளார். அவர் 20 ஆண்டுகாலம் கால்பந்து ஆட்டத்திற்காக தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளார். சேத்ரி 93 கோல்களுடன் இந்தியாவின் அதிக கோல் அடித்தவர் மட்டுமல்லாமல், சர்வதேச பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக ஊடக தளத்தில் (எக்ஸ்) 10 நிமிட வீடியோ மூலம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுனில் சேத்ரி ஓய்வு
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024