LOADING...
கொல்கத்தா வந்தடைந்தார் லியோனல் மெஸ்ஸி; நான்கு நாள் பயணத்தின் முழு அட்டவணை
கொல்கத்தா வந்தடைந்தார் லியோனல் மெஸ்ஸி

கொல்கத்தா வந்தடைந்தார் லியோனல் மெஸ்ஸி; நான்கு நாள் பயணத்தின் முழு அட்டவணை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 13, 2025
09:07 am

செய்தி முன்னோட்டம்

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ஒரு பரபரப்பான மூன்று நாள், நான்கு நகர 'GOAT இந்தியா சுற்றுப்பயணத்தை'த் தொடங்கியுள்ளார். அவர் சனிக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 2.26 மணிக்கு கொல்கத்தாவுக்கு வந்திறங்கினார். அவரது வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் அவரது முழு சுற்றுப்பயண விவரம் பின்வருமாறு:-

கொல்கத்தா

கொல்கத்தா நிகழ்ச்சிகள்

மெஸ்ஸியின் முதல் நாள் சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வு கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு அவர் மோகன் பகான் மற்றும் டயமண்ட் ஹார்பர் மெஸ்ஸி ஆல் ஸ்டார்ஸ் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். இதில் சண்டோஷ் டிராபி வென்ற வங்காள அணியை கெளரவித்தல் மற்றும் இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கான மெஸ்ஸியுடன் மாஸ்டர் கிளாஸ் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் நடிகர் ஷாருக் கான் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போன்ற முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். மேலும், மெஸ்ஸியின் 70 அடி சிலையை மெய்நிகராகத் திறந்து வைக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.

ஹைதராபாத்

ஹைதராபாத் நிகச்சிகள்

கொல்கத்தாவிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு ஹைதராபாத் புறப்படும் மெஸ்ஸி, அங்கு ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு செல்கிறார். இங்கு சிறிய அளவிலான கண்காட்சி கால்பந்துப் போட்டி, குழந்தைகளுக்கான கால்பந்துப் பயிற்சி மற்றும் கெளரவிக்கும் விழாக்கள் இடம்பெறுகின்றன. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பங்கேற்கிறார்.

Advertisement

மும்பை

மும்பை நிகழ்ச்சிகள்

அடுத்ததாக மும்பை செல்லும் மெஸ்ஸி, அங்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்துகொள்கிறார். இதில் சுவாரஸ் மற்றும் டி பால் பங்குபெறும் அறக்கட்டளைக்கான பேஷன் ஷோ மற்றும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் நடைபெறும் பேடல் கோப்பை போட்டியும் அடங்கும்.

Advertisement

டெல்லி

டெல்லி நிகழ்ச்சிகள்

இறுதி நிகழ்ச்சியாக மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தலைநகரில் மினர்வா அகாடமியின் இளையோர் கோப்பை வென்ற அணிகளை கெளரவித்தல் மற்றும் ஒன்பது பேர் கொண்ட நட்சத்திரக் கால்பந்துப் போட்டி ஆகியவை இந்தப் பயணத்தை நிறைவு செய்யும். சுற்றுப்பயணத்தின் விளம்பரதாரர் சதாத்ரு தத்தா, உலகக் கோப்பை மற்றும் எட்டாவது பலூன் டி'ஓர் விருதை வென்ற பிறகு மெஸ்ஸி இந்தியாவுக்கு வருவது கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று கூறினார். இந்தப் பயணம் இந்திய கால்பந்துக்கு ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement