ஐஎஸ்எல் கால்பந்து லீக் : ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமனம்
இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது. ஜாம்ஷெட்பூர் எஃப்சி தலைமை நிர்வாக அதிகாரி முகுல் சவுதாரி கூறுகையில், "ஐஎஸ்எல் மற்றும் ஐஎல்லீக்கில் முழுமையான அனுபவம் கொண்ட பயிற்சியாளரான காலித் ஜமிலை நான் வரவேற்கிறேன். கலிங்கா சூப்பர் கோப்பை மற்றும் ஐஎஸ்எல்லில் பாதி எஞ்சியிருக்கும் நிலையில், அடுத்த ஆட்டத்தில் தொடங்கி, இந்தியக் கால்பந்தில் எங்களைக் கட்டமைத்து, முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான புரிதல், அனுபவம் மற்றும் சாதனைப் பதிவு அவருக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி 10ஆம் தேதி புவனேஸ்வரில் நடக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான போட்டியில் காலித் பொறுப்பேற்க உள்ளார்.