Page Loader
கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்
கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்

கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2023
08:08 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) டுரினில் நடந்த கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற மைல்கல்லை இங்கிலாந்து மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் படைத்துள்ளார். ஐரோப்பிய கிளப்பில் விளையாடும் 21 வயதுக்குட்பட்ட சிறந்த கால்பந்து வீரருக்கு கோல்டன் பாய் விருது வழங்கப்படுகிறது. 20 வயதான அவர், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் சக வீரர் அர்டா குலர் உட்பட 25 போட்டியிட்டு விருதை வென்றுள்ளார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, பெல்லிங்ஹாம் தனது வாழ்க்கையில் பெரிய இலக்குகளை வைத்திருப்பதாகவும், முடிந்தவரை பல கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றும் கூறினார்.

Jude Bellingham becomes first real madrid player to get golden boy award

கோபா டிராபியை வென்ற ஜூட் பெல்லிங்ஹாம்

கோல்டன் பாய் விருதுக்கு முன்னதாக பெல்லிங்ஹாம் கால்பந்து உலகின் பிரபலமான பலோன் டி'ஓர் காலாவில் கோபா டிராபியையும் வென்றுள்ளார். 20 வயதான அவர் ரியல் மாட்ரிட் அணிக்காக தனது முதல் சீசனில் விளையாடி வரும் நிலையில், அணிக்காக 15 கோல்களை அடித்து மிகச்சிறந்த தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். இதற்கிடையே, நேபோலிக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக்கில் அணிக்காக தனது கடைசி கோலை அடித்தார். இதில் ரியல் மாட்ரிட் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது, லா லிகாவில் ரியல் மாட்ரிட் அணி தனது டாப் ஃபார்மில் உள்ளது. 15 ஆட்டங்களில் 12ல் வெற்றி பெற்று 38 புள்ளிகளுடன் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது.