ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்காக 50 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை கத்தாரில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கு 50 பேர் கொண்ட ஆயத்த அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்தார். அணியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஐந்து கோல்கீப்பர்கள், 15 டிஃபென்டர்கள், 15 மிட்ஃபீல்டர்கள் மற்றும் 15 முன்கள வீரர்கள் உள்ளனர். இந்த மிகப்பெரிய ஆயத்த அணியினருக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு அதிலிருந்து இறுதிக்கட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. குழுநிலை ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரி 13, உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ஜனவரி 18 மற்றும் சிரியாவுக்கு எதிராக ஜனவரி 23 அன்று மோத உள்ளது.