NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி
    புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி

    அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக கேரளாவிற்கு வருகை தரும் என்று கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், மாநில அரசின் முழுமையான கண்காணிப்பில் போட்டி நடத்தப்படும் என்று கூறினார்.

    "இந்த உயர்மட்ட கால்பந்து நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான அனைத்து நிதி உதவியும் மாநிலத்தின் வணிகர்களால் வழங்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.

    இந்த வரலாற்று நிகழ்வை நடத்தும் கேரளா மாநிலம் வெற்றிகரமாக நடத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    மெஸ்ஸி கடைசியாக 2011 ஆம் ஆண்டு வெனிசுலாவுக்கு எதிரான சர்வதேச நட்பு போட்டியில் அர்ஜென்டினா பங்கேற்ற போது இந்தியாவில் விளையாடினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #SportsUpdate | அடுத்தாண்டு இந்தியா வருகிறார் மெஸ்ஸி..!#SunNews | #LionelMessi | #Kerala pic.twitter.com/SJ0CccZmjE

    — Sun News (@sunnewstamil) November 20, 2024

    பின்னணி

    கால்பந்து ரசிகர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளா

    பாரம்பரியமாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தேசமான இந்தியாவில், கேரளா மாநிலத்தில் அதிகமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.

    அதிலும் குறிப்பாக உலக கால்பந்து சின்னமான லியோனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் ஏராளம்.

    அவரது இந்திய அபிமானிகள் மத்தியில், கேரளா மாநிலம் மெஸ்ஸி வெறியின் மையமாக தனித்து நிற்கிறது.

    அர்ஜென்டினா மேஸ்ட்ரோவின் விளையாட்டு, அவரது சாதனைகளைக் கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள் மற்றும் கூட்டங்களுடன், கேரளா அவருக்கு நிச்சயமாக சொந்த நாட்டை போன்ற கொண்டாட்டத்தை தரும்.

    கேரளாவின் கால்பந்து கலாச்சாரம், பேரார்வம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது, மெஸ்ஸியை தனக்கென ஒருவராக ஏற்றுக்கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லியோனல் மெஸ்ஸி
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    கேரளா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    லியோனல் மெஸ்ஸி

    பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கால்பந்து
    மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் லியோனல் மெஸ்ஸி! கால்பந்து
    இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி சேர உள்ளதாக தகவல்! மேஜர் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு! கால்பந்து
    விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி சீனா

    கால்பந்து

    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கைது
    Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    2024 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் கால்பந்து அணி மகளிர் கால்பந்து
    கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்றார் மெஸ்ஸி  லியோனல் மெஸ்ஸி

    கால்பந்து செய்திகள்

    மெர்டேகா கோப்பையில் மலேசியாவுக்கு எதிராக மோத தயாராகும் இந்திய கால்பந்து அணி கால்பந்து
    Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி கால்பந்து

    கேரளா

    கேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி பாஜக
    அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு இந்தியா
    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்  பாஜக
    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் குவைத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025