LOADING...
லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் நீட்டிப்பு: டெல்லியில் இருந்து இந்த மாநிலத்திற்கு செல்கிறார்
லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் மேலும் ஒருநாள் நீட்டிப்பு

லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் நீட்டிப்பு: டெல்லியில் இருந்து இந்த மாநிலத்திற்கு செல்கிறார்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
07:04 pm

செய்தி முன்னோட்டம்

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 'GOAT இந்தியா டூர்' திட்டமிட்டதை விட நீட்டிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி இன்று (டிசம்பர் 15) இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்றுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மெஸ்ஸி, தனது பயணத்தின் இறுதி நாளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் சக கால்பந்து நட்சத்திரங்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரொட்ரிகோ டி பால் ஆகியோருடன் கலந்து கொண்டார். தலைநகரில் நிலவியப் புகைமூட்டம் காரணமாக அவரது வருகையில்ச் சிறிதுத் தாமதம் ஏற்பட்டாலும், ரசிகர்கள் கூட்டம் அவரை உற்சாகமாக வரவேற்றது. திட்டப்படி இன்று இரவோடு இந்தியாவிடம் விடைபெறவிருந்த மெஸ்ஸி, தற்போது மேலும் ஒரு நாள் தங்கி, குஜராத் மாநிலத்திற்குப் பயணிக்க உள்ளார்.

குஜராத்

குஜராத்தில் அம்பானி விருந்து

லியோனல் மெஸ்ஸி லூயிஸ் சுவாரஸுடன் இணைந்து, குஜராத்தில் உள்ள வந்தாரா என்ற இடத்திற்குச் செல்கிறார். அங்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநரான அனந்த் அம்பானி விருந்தளித்து உபசரிப்பார் என்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸி, ரசிகர்களிடம் பேசுகையில், "இந்த அன்பையெல்லாம் நாங்கள் எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். ஒருவேளை, ஒரு போட்டியில் விளையாட அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வருவோம். இங்கு சென்ற இந்த நாட்களில் நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்துக்கும் மிக்க நன்றி. இது எங்களுக்கு உண்மையிலேயே அழகான அனுபவமாக இருந்தது." என்றுத் தெரிவித்தார்.

Advertisement