NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2024
    08:34 am

    செய்தி முன்னோட்டம்

    ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.

    அவருக்கு வயது 78.

    பெக்கன்பேவர் தலைமையிலான ஜெர்மனி அணி, கடந்த 1974-ல் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

    இது மட்டுமின்றி யூரோ கோப்பை மற்றும் Ballon d'Or விருதையும் பெக்கன்பேவர் வென்றுள்ளார். கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றபிறகு, ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக தொடர்ந்தார்.

    இவரின் வழிகாட்டுதலில், 1990-ல் உலகக் கோப்பை வென்றது ஜெர்மனி அணி.

    அவரது மறைவுக்கு இந்நாள் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    card 2

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஸ்குவாஷில் அனாஹத் சிங் 2-வது இடம்

    இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்றது.

    இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து நாட்டின் நாடியன் எல்ஹம்மாமியுடன் மோதினார்.

    இதில் அனாஹத் சிங் 11-7, 11-13, 10-12, 11-5, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து, 2-வது இடத்தை பெற்றார்.

    இந்த போட்டி 68 நிமிடங்கள் நடைபெற்றது.

    மறுபுறம் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஆர்யவீர் திவான் 3-வது இடம் பிடித்தார்.

    card 3

    துப்பாக்கி சுடுதலில் வருண் தோமர், ஈஷா சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

    அடுத்ததாக பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

    இதில், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று, இந்தோனேஷியா ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் 239.6 புள்ளிகள் பெற்றார்.

    அதனால் தங்கப் பதக்கம் வென்றதுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு இந்திய வீரரான அர்ஜூன் சீமா 237.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

    மறுபுறம், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஈஷா சிங் 243.1 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    card 4

    மகளிர் கிரிக்கெட் டி20 தொடரின் இறுதி போட்டி: மீண்டும் இந்தியா-ஆஸ்திரேலியா அணி மோதல்

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்தது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

    இதில் வெற்றி பெரும் அணியே வெற்றி கோப்பையை தூக்கும். பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டம், இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

    card 5

    கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்காக தயாராகும் நேரு விளையாட்டு அரங்கம்

    6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்துகொள்ள மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு வீரர்கள்
    ஜெர்மனி
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    விளையாட்டு வீரர்கள்

    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா  தென் கொரியா

    ஜெர்மனி

    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ
    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்

    கால்பந்து

    Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    சவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்திய கால்பந்து அணி தோல்வி, விளாசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஆசிய விளையாட்டுப் போட்டி

    கால்பந்து செய்திகள்

    கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; இந்தியாவுக்கு விளையாட வரும் நெய்மர் கால்பந்து
    வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட் கால்பந்து
    ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    உதட்டுமுத்த சர்ச்சை; ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு பிபா தலைவர் கண்டனம் மகளிர் கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025