
மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் சூப்பர் லீக் அணிகளில் ஒன்றான மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணி 2023-24 சீசனில் பெற்ற மோசமான தோல்விகளைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கியுள்ளது.
முன்னதாக, ஃபெராண்டோ 2021-22 சீசனின் நடுப்பகுதியில் மொஹூன் பாகனுடன் சேர்ந்தார்.
புதன்கிழமை (ஜனவரி 3) இதுகுறித்து மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கி விட்டு, அன்டோனியோ ஹபாஸை இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இவர் ஏற்கனவே மொஹூன் பாகன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.
மேலும், இந்த மாதம் தொடங்க உள்ள கலிங்கா சூப்பர் கோப்பையின்போது பொறுப்பை ஏற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மொஹூன் பாகன் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
Some stories cannot be left incomplete…
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 3, 2024
Welcome back, Señor Habas 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/G9AITqzQtP