Page Loader
சுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு
இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ்

சுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 11, 2024
06:13 pm

செய்தி முன்னோட்டம்

ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய கால்பந்து பற்றிய தனது எண்ணங்களை விளக்கினார். தற்போதைய வீரர்களுக்கு வலுவான மனநிலை இல்லை என்று அவர் கூறினார். சுனில் சேத்ரிக்கு மாற்றாக ஒரு வீரரை அணியில் உருவாக்குவது தற்போது மிகவும் அவசியம் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியர் ஒருவர் வரவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். இந்திய கால்பந்து அணி தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் வெளியேறியதைத் தொடர்ந்து, இந்திய கால்பந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக மார்க்வெஸ் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

புதிய கால்பந்து பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு