ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
சனிக்கிழமை (டிசம்பர் 30) இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர், இகோர் ஸ்டிமாக், ஏஎப்சி ஆசிய கோப்பை கத்தார் 2023 இல் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை அறிவித்தார். குழு பி'யில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரி 13, 2024 அன்று அல் ரயானில் உள்ள அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து, அவர்கள் ஜனவரி 18ஆம் தேதி உஸ்பெகிஸ்தானை அதே மைதானத்தில் எதிர்கொள்வதோடு, ஜனவரி 23ஆம் தேதி சிரியாவுக்கு எதிராக அல்கோரில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது.
ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கான 26 பேர் கொண்ட இந்திய அணி பட்டியல்
கோல்கீப்பர்கள் : அம்ரீந்தர் சிங், குர்பிரீத் சிங் சந்து, விஷால் கைத். டிஃபெண்டர்கள் : ஆகாஷ் மிஸ்ரா, லால்சுங்னுங்கா, மெஹ்தாப் சிங், நிகில் பூஜாரி, ப்ரீதம் கோட்டல், ராகுல் பேகே, சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ். மிட்ஃபீல்டர்கள் : அனிருத் தாபா, பிராண்டன் பெர்னாண்டஸ், தீபக் டாங்ரி, லாலெங்மாவியா ரால்டே, லிஸ்டன் கோலாகோ, நௌரெம் மகேஷ் சிங், சாஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங் வாங்ஜாம், உதாந்தா சிங். ஃபார்வார்டுகள் : இஷான் பண்டிதா, லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங், ராகுல் கன்னோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பர்தாப் சிங்.