LOADING...
அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?
அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு

அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2025
04:50 pm

செய்தி முன்னோட்டம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் அல் நாசருடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய கால்பந்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம், அவர் 2027 வரை அல் நாசர் கால்பந்து கிளப் அணிக்காக விளையாட உள்ளார். முன்னதாக, 2023 இல் அல் நாசரில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மற்றொரு கோப்பை இல்லாத சீசனுக்குப் பிறகு சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியேறுவது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். லீக்கின் அதிக கோல் அடித்தவராக இருந்தபோதிலும், அல் நாசர் லீக் பட்டத்தை வெல்லவோ அல்லது ஃபிஃபா கிளப் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவோ தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

விபரங்கள்

ஒப்பந்த விபரங்கள்

அறிக்கைகளின்படி, ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம் ஆண்டுக்கு £178 மில்லியன் மதிப்புடையது. முழுமையான நிதி விபரங்கள் பின்வருமாறு:- £24.5 மில்லியன் கையொப்ப போனஸ் (இரண்டாம் ஆண்டில் £38 மில்லியனாக உயரும்) அல் நாசர் சவுதி ப்ரோ லீக்கை வென்றால் £8 மில்லியன் போனஸ் ஆசிய சாம்பியன்ஸ் லீக்கை வென்றால் £5 மில்லியன் போனஸ் கோல்டன் பூட் வென்றால் £4 மில்லியன் போனஸ் அல் நாசரில் 15% உரிமைப் பங்கு, £33 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது ஒரு கோலுக்கு £80,000 (இரண்டாம் ஆண்டில் 20% அதிகரிக்கும்) ஒரு கோல் உதவிக்கு £40,000 (இரண்டாம் ஆண்டில் 20% அதிகரிக்கும்) ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் £60 மில்லியன் உத்தரவாதம் தனியார் ஜெட் செலவுகள் £4 மில்லியன்

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post