Page Loader
தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப்
தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப்

தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப்

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 27, 2023
12:11 pm

செய்தி முன்னோட்டம்

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தை தொடந்து, யூடியூப் நிறுவனமும் கேமிங் வசதியை விரைவில் வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கேமர்கள் தங்களுடைய கேமிங்கை ஸ்ட்ரீம் செய்வதற்கான முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக விளங்கி வருகிறது கூகுளை தாய் நிறுவனமாகக் கொண்ட யூடியூப் நிறுவனம். எனவே, தற்போது யூடியூப் வலைத்தளம் மற்றும் யூடியூப் மொபைல் செயலிகளில் உள்ளேயே விளையாடக்கூடிய வகையில் 'பிளேயபில்ஸ்' என்ற பெயரில் புதிய கேமிங் வசதியை உருவாக்கி வருகிறது யூடியூப். தற்போது தங்கள் நிறுவன ஊழியர்களுக்கிடையேயே இந்த புதிய வசதியை அந்நிறுவனம் சோதனை செய்தும் வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களது கிளவுடு கேமிங் சேவையான ஸ்டேடியாவை, சரியான வரவேற்பில்லாத நிலையில் கூகுள் நிறுவனம் மூடியது குறிப்பிடத்தக்கது.

யூடியூப்

யூடியூப் கேமிங்: 

இந்த புதிய சேவை குறித்து யூடியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசும் போது, "இந்த புதிய வசதியை தற்போது தான் சோதனை செய்து வருகிறோம். இது குறித்து பகிர்ந்து கொள்வதற்கு பெரிதாக வேறு எந்தத் தகவல்களும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், கேமிங் சேவையை தொடங்குவது குறித்து யூடியூப் பல ஆண்டுகளாவே திட்டமிட்டு வந்தது, எனவும் அவர் தெரிவித்துள்ளார். கன்சோல் கொண்டு விளையாடும் வகையிலான கிளவுடை அடிப்படையாகக் கொண்ட கேம்களில் கவனம் செலுத்தாமல், எளிமையாக விளையாடக் கூடிய வகையிலான ஸ்டாக் பவுன்ஸ் (Stack Bounce) போன்ற கேம்களிலேயே யூடியூப் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த புதிய சேவையை அனைத்து பயனர்களுக்கும் யூடியூப் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.