Page Loader
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்: 'வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்
வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் பிறந்தநாள் இன்று

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்: 'வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2023
03:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றிய பெருமையைப் பெற்ற பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்யின் பிறந்தநாள் இன்று. இந்நாளில், அவரை பற்றி சில சுவாரசிய தகவலைகளை தெரிந்துகொள்ளுங்கள். பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், ஒரு நாவலாசிரியர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் ஜூன் 26, 1838 இல் பிறந்தார். சாகித்ய சாம்ராட் (இலக்கியத்தின் பேரரசர்) என்று அழைக்கப்படும் அவர், சீரியஸ் நாவல்கள் முதல் நகைச்சுவை, நையாண்டி கலந்த நாவல்கள் என பலதரப்பட்ட கதைகளை எழுதியுள்ளார். பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், மேற்கு வங்காளத்தில் உள்ள நைஹாட்டியில், துர்காதேவி மற்றும் யாதவ் சந்திர சட்டோபாத்யாய ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பெங்காலி பிராமண குடும்பத்தில் இருந்து வந்த அவர், 11 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

card 2

'வந்தே மாதரம்' பாடல் உருவான கதை 

சிறுவயது முதல் எழுத்தார்வம் கொண்ட சட்டோபாத்யாய், தனது நாவல்களை ஒரு பேப்பரில் எழுதி, வாரந்தோறும் விற்பனை செய்து வந்தார். பின்னர் அவற்றை புத்தங்கள் வடிவில் கொண்டு வந்தார். பின்னர் அவரது படைப்புகள், வார இதழான சங்பாத் பிரபாகரில் வரத்துவங்கியது. 1882-ஆம் ஆண்டில், சட்டோபாத்யாய், தனது 'ஆனந்தமத்' நாவலை வெளியிட்டார், அதில் வந்தே மாதரம் வசனங்களும் இருந்தன. 1770 ஆம் ஆண்டு பேரழிவு ஏற்படுத்திய வங்காளப் பஞ்சம் தான் கதைக்களம். நவீனமயமான கிழக்கிந்திய கம்பெனிப் படைகளை எதிர்த்து போராடி வென்ற சன்னியாசி வீரர்கள் என்ற கற்பனை கதை அது. அதில் இடம் பெற்ற சில வரிகளே 'வந்தே மாதரம்' பாடல்.