
பல மகத்தான சாதனைகளை கல்வித்துறையில் செய்து வருகிறோம் - தமிழக முதல்வர்
செய்தி முன்னோட்டம்
சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த நடத்திய சிற்பித்திட்டத்தின் நிறைவுவிழா இன்று(ஜூன்.,26)நடந்தது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர்,"இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு மாவட்டம் நம்பர் 1 என கூறும் வகையில் நாம் வளர்ந்து வருகிறோம். கல்வித்துறையினை பொருத்தவரையில், காலை சிற்றுண்டித்திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல மகத்தான சாதனைகளை நாம் படைத்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலம் தான் கல்வித்துறையில் 2ம்இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் எந்த கவலையுமின்றி படிக்கவேண்டும், எவ்வித போதை பழக்கத்திற்கும் அடிமையாகி விடக்கூடாது.
தங்கள் நண்பர்களையும் அடிமையாக விடக்கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக கல்வித்துறை வளர்ச்சி குறித்து மு.க.ஸ்டாலின்
#JustIn | "கல்வித்துறையில் மகத்தான சாதனையை நாம் படைத்து வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #CMMKStalin | #CMBreakfastScheme | @mkstalin pic.twitter.com/4EHffNhIzq
— Sun News (@sunnewstamil) June 26, 2023