'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக
செய்தி முன்னோட்டம்
பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக, "முதலில் இந்துக்களுக்கு பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து சாதியினரையும் முதலில் கோவிலுக்குள் பிராத்திக்க அனுமதிக்க வேண்டும்." என்று கூறியுள்ளது.
இன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கூறி இருந்தார்.
"ஒரே குடுமபத்தில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு சட்டம் இருந்தால் அது வேலைக்கு ஆகாது. அதே போல் ஒரு நாடு இரண்டு சட்டங்களின் கீழ் இயங்க முடியாது." என்று பிரதமர் மோடி இன்று கூறி இருந்தார்.
பிய்ன்வ்
'மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் ஒருபோதும் பேசுவதில்லை': காங்கிரஸ்
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுகவின் TKS இளங்கோவன், "ஒரே மாதிரியான சிவில் சட்டம் முதலில் இந்து மதத்தில் கொண்டு வரப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் எந்த கோவிலிலும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளது. அதனால் எங்களுக்கு UCC (பொது சிவில் சட்டம்) தேவையில்லை," என்று கூறியுள்ளார்.
மேலும், "மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் ஒருபோதும் பேசுவதில்லை. அந்த மாநிலமே எரிந்து கொண்டிருக்கிறது. அந்த பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார்." என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.