கேரளா ஸ்டோரி: OTT தளத்தில் வெளியிடுவதில் சிக்கல்
செய்தி முன்னோட்டம்
கடந்த மே மாதத்தின் துவக்கத்தில் வெளியான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'.
இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாதென அரசியல் தலைவர்களும், உளவு துறையும் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, திரைப்படம் வெளியானது.
ஒரு சில மாநிலங்களில், திரைப்படம் வெளியானதும், தடை விதிக்கப்பட்டது.
சுதிப்தோ சென் இயக்கிய இந்தப் படம், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இஸ்லாமிய அரசு அல்லது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் கூறுகிறது.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இப்படம் பல அண்டை நாடுகளில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்றது.
card 2
OTT தளத்தில் வெளியாவதில் சிக்கல்
இந்தியாவில் வெளியான மாநிலங்களிலும் வசூல் சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், ஓடிடி தளத்தில் இதை வாங்க யாரும் முன்வரவில்லை என அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகளை எடுத்து வருகிறோம், ஆனால் எந்த ஒரு ஓடிடி தளமும் இந்த படத்தை வாங்க முன் வரவில்லை. இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரையுலகில் பலருக்கு கோவத்தை தூண்டியுள்ளது, எங்களை தண்டிக்க வேண்டும் என்று திரையுலகில் பலரும் ஒன்று சேர்ந்து சதி தீட்டியுள்ளனர்" என்று சுதிப்தோ சென் தெரிவித்தார்.