Page Loader
எம்சிசி உலக கிரிக்கெட் கவுன்சிலில் இணைந்தார் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி
எம்சிசி உலக கிரிக்கெட் கவுன்சிலில் இணைந்தார் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி

எம்சிசி உலக கிரிக்கெட் கவுன்சிலில் இணைந்தார் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2023
08:17 pm

செய்தி முன்னோட்டம்

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியில் இணைந்துள்ளதாக கிளப் திங்களன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது. ஜூலன் கோஸ்வாமியைத் தவிர, இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹுதர் நைட் மற்றும் 2019 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆகியோரும் இந்த குழுவில் இணைந்துள்ளனர். எம்சிசி உலக கிரிக்கெட் கவுன்சில் என்பது தற்போதைய மற்றும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வாரிய அதிகாரிகளைக் கொண்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். முன்னதாக ஜூலன் கோஸ்வாமி இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் எம்சிசியின் கெளரவ வாழ்நாள் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

mcc world cricket committee statement

எம்சிசி கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை

உலக கிரிக்கெட் குழுவிற்கு ஜூலன், ஹீதர் மற்றும் இயோன் ஆகியோரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையில் மேலும், "இந்த மூன்று வீரர்கள் சர்வதேச விளையாட்டின் உச்சத்தில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் உயரடுக்கு கிரிக்கெட் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அவர்களின் அறிவு கமிட்டிக்கு சாதகமாக இருக்கும். சமீப ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட் பெற்று வரும் வளர்ச்சியுடன் குழுவில் பெண் பிரதிநிதித்துவத்தை நாங்கள் வளர்த்து வருகிறோம் என்பதும் முக்கியம். ஜூலன் மற்றும் ஹீதர் கிளேர் கானர் மற்றும் சுசி பேட்ஸ் ஆகியோருடன் இணைகிறார்கள். அவர்கள் அனைவரும் மகளிரின் விளையாட்டைப் பற்றிய முதல் பார்வையை வழங்க முடியும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.