Page Loader
சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2023
05:08 pm

செய்தி முன்னோட்டம்

ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு 2023 போட்டியில் இந்தியா 202 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும். பெர்லின் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குழுவின் செயல்திறன் குறித்து பேசிய சிறப்பு ஒலிம்பிக் பாரத் தலைவர் டாக்டர். மல்லிகா நட்டா, "நமது விளையாட்டு வீரர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பல்வேறு வடிவங்களில் சமூகப் பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளனர். விளையாட்டு அரங்கில் அவர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்கிறது. மேலும் இது வெளியில் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும் என்றும், இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, மேலும் உள்ளடக்கியதாக மாற்ற வேண்டும் என்பதை நிரூபிப்பதாகவும் நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 202 பதக்கங்கள்