
படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்
செய்தி முன்னோட்டம்
மலையாள படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ்.
தமிழிலும், 'மொழி', 'இராவணன்', 'காவியத்தலைவன்' போன்ற ஒரு சில வெற்றி படங்கள் நடித்து, தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் இவர்.
இவர் நடிகர் மட்டுமல்ல, படத்தயாரிப்பாளரும், இயக்குனரும் கூட. இவர் இயக்கத்தில் வெளியான 'லூசிபர்' என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் தேர்ந்த நடிகர் என பெயர்பெற்ற இவர், தற்போது, 'விளையாத் புத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக கொச்சின் நகரில் உள்ள மறையூர் என்ற இடத்தில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக, அவருக்கு காலில் அடிபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இன்று அறுவை சிகிச்சை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் பிரித்விராஜிற்கு காயம்
#CinemaUpdate | படப்பிடிப்பின்போது நடிகர் பிருத்விராஜ் காயம்!#SunNews | #PrithvirajSukumaran | #VilayathBuddha pic.twitter.com/358FkQT5Rf
— Sun News (@sunnewstamil) June 26, 2023