இரவு முழுவதும் பார்ட்டிக்கு போய்விட்டு போட்டியில் 250 ரன்கள் குவித்த விராட் கோலி
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தின் பல்வேறு கட்டங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக இரவு முழுவதும் பார்ட்டிக்கு பிறகு அடுத்த நாள் 250 ரன்கள் எடுத்த தருணத்தையும் நினைவு கூர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக தொடர் ஃபார்ம் இழப்பை சந்தித்து வந்த விராட் கோலி 2022இல் இருந்து தன்னை மெருகேற்றி மீண்டும் தற்போது உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னை மாற்றிக்கொண்டதாகவும், இப்போது மிகவும் கண்டிப்பான டயட்டைப் பின்பற்றுவதாகவும், தனது உடற்தகுதியைப் பராமரிக்க ஜிம்மில் கடுமையாக உழைப்பதாகவும் கோலி அடிக்கடி கூறி வருகிறார்.
விராட் கோலியின் சுவாரஸ்ய சீக்ரெட்டுகளை இஷாந்த் ஷர்மா
இஷாந்த் மற்றும் கோலி இருவரும் 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் ஒன்றாக விளையாடத் தொடங்கி, டெல்லி உள்நாட்டு மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் வரை ஒன்றாக விளையாடியதால் மிகவும் வலுவான நட்புறவை கொண்டுள்ளனர். யு-19 நாட்களில் கொல்கத்தாவில் நடந்த ஒரு போட்டிக்கு முந்தைய இரவு முழுவதும் பார்ட்டிக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் கோலி 250 ரன்கள் எடுத்ததை பார்த்து தான் மிகவும் வியந்ததாக இஷாந்த் தெரிவித்துள்ளார். வழக்கமாக டெல்லி மக்களுக்கு உணவு மீது அலாதி பிரியம் இருந்தாலும், கோலி 2012 ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு தனக்கு பிடித்தமான சோலே பட்டுராவை சாப்பிடுவதை கூட கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார் என்ற சுவாரஸ்ய தகவலையும் தெரிவித்துள்ளார்.