விராட் கோலிக்காக இந்தியா ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் : வீரேந்திர சேவாக்
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இறுதியாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அறிவித்தன.
போட்டி அட்டவணை வெளியீடு மும்பையில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று பேசினர்.
இதில் கலந்துகொண்டு பேசிய வீரேந்திர சேவாக், 2011இல் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா உலகக் கோப்பையை வென்றதன் நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினார்.
அப்போது இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகளைக் கணிக்குமாறு கேட்க, அவர் இந்தியா நாக் அவுட் நிலைக்குச் செல்லும் என தெரிவித்துள்ளார்.
sehwag prediction for odi world cup
நாக் அவுட் போட்டிகளுக்கு முன்னேறும் அணிகள் குறித்து வீரேந்திர சேவாக் கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணியை தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறும் என வீரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து நடப்பு சாம்பியனாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பாகிஸ்தானை தேர்ந்தெடுத்திருப்பது சுவாரஸ்யமானது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் முதல் நான்கு இடங்களுக்குள் வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே, உலகக் கோப்பையில் இந்தியாவின் வாய்ப்புகள் குறித்தும் பேசிய சேவாக், "எல்லோரும் விராட் கோலிக்காக இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அவர் ஒரு சிறந்த வீரர், சிறந்த மனிதர், அவர் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவுகிறார்." என்று கூறினார்.