தோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்
டி20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த ஒரே கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி தான். தனது கேப்டன்சிக்காக உலகம் முழுவதும் போற்றப்படும் எம்எஸ் தோனி, 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் நடக்காதபோது ரசிகர்கள் அவரை பார்ப்பது அரிது எனும் நிலையில், விமானத்தில் தோனிக்கு விமானப் பணிப்பெண் சாக்லேட் வழங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் தோனி கேண்டி கிரஷ் கேம் விளையாடுவதும் பதிவாகியுள்ளதால், தோனி கேண்டி கிரஷ் ரசிகரா என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.