Page Loader
மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன்
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன்

எழுதியவர் Sindhuja SM
Jun 26, 2023
12:55 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகா மாநிலத்தில், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு, தன் நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த நபரின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி தாலுகாவை சேர்ந்தவர் விஜய்(36). இவர் தனது மனைவியுடன் சிந்தாமணி டவுனில் வசித்து வருகிறார். விஜயும் அவரது நண்பர் மாரேஷும் சரக்கு ஆட்டோவில் துணி விற்பனை செய்து பிழைத்து வந்தனர். இந்நிலையில், மாரேஷ்(34) அடிக்கடி தன் வீட்டுக்கு வந்து போவதை கவனித்த விஜய், மாரேஷுக்கும் தன் மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகிக்க தொடங்கினார். இந்த சந்தேகம் முத்தி போகவே, எப்படியாவது மாரேஷை கொன்றுவிட வேண்டும் என்று விஜய் திட்டம் தீட்டினார்.

 சஜின்

சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது

இதனையடுத்து, கடந்த ஜூன் 19ஆம் தேதி, மாரேஷை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்ற விஜய், அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு வாதம் பின்பு சண்டையாக மாறியது. மாரேஷ் மீது ஆத்திரத்தில் இருந்த விஜய், மறைத்து வைத்திருந்த தனது கத்தியை எடுத்து மாரேஷின் கழுத்தை அறுத்து, அவரது ரத்தத்தை குடித்தார். இதெயெல்லாம் வீடியோவாக பதிவு செய்த அவர்களது நண்பர் ஜான், அதை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. மாரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது நலமாக இருக்கிறார். மேலும், மரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விஜய்யை கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.