Loading...
நவம்பர் 10-ல் கிரீஸில் திருமணமா? அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து பரவும் காட்டுத்தீ வதந்தி
இவர்களது திருமணம் வரும் நவம்பர் 10, 2026 அன்று நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

நவம்பர் 10-ல் கிரீஸில் திருமணமா? அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து பரவும் காட்டுத்தீ வதந்தி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2026
09:19 am

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் முதன்மை நிர்வாகியான காவ்யா மாறன் ஆகியோர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. சமீபத்தில் உலா வரும் தகவல்களின்படி, இவர்களது திருமணம் வரும் நவம்பர் 10, 2026 அன்று நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் திருமணம் கிரீஸ் நாட்டில் ஒரு ஆடம்பரமான டெஸ்டினேஷன் வெடிங் நிகழ்வாக நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், திருமண இடம் அல்லது ஏற்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வதந்தி

வதந்தியும் உண்மையும்

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், ஐபிஎல் போட்டிகளின் போது கிடைத்த பிரபல்யத்தின் மூலம் உலகளவில் ரசிகர்களை பெற்றவர்.

மறுபுறம், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழும் அனிருத், சமீபத்தில் வெளியான லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்திற்கு இசையமைத்து பெரும் பாராட்டுகளை பெற்றார்.

இவர்கள் இருவரின் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வந்தாலும், இதுவரையிலும் அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் இருந்தோ அல்லது அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

எனவே, ரசிகர்கள் இத்தகைய அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT