Loading...
வெளிநாடுகளில் ஏஐ தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
வெளிநாடுகளில் ஏஐ தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை

வெளிநாடுகளில் ஏஐ தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
11:11 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையங்களை அமைக்க தனது நிர்வாகம் அனுமதிக்காது என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடுகளில் அமைக்கப்படும் தரவு மையங்கள் அனைத்தையும் சீனா கையகப்படுத்திவிடும் என எச்சரித்தார். எனவே அமெரிக்காவுக்கு வெளியே தரவு மையங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான வரி விதிக்கப்படும் என அவர் கூறினார். இருப்பினும் இத்திட்டத்தின் விவரங்களை வெளியிடாத டிரம்ப், இது குறித்து தனது அதிகாரிகளிடம் கூட இன்னும் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

டிரம்ப் வேண்டுகோள்

உள்ளூர் சமூகங்கள் தரவு மையங்களை வரவேற்க வேண்டும் என டிரம்ப் வேண்டுகோள்

தரவு மைய முதலீடுகளை அமெரிக்காவிற்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

உள்ளூர் சமூகங்கள் தங்களது பகுதிகளில் தரவு மையங்கள் அமைப்பதைத் தடுக்காமல் வரவேற்று, டெவலப்பர்களிடம் சமூக நலனுக்கான நிதி மற்றும் சலுகைகளைப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சிப் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப முதலீடுகளை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதித்ததே அமெரிக்கா பின்தங்கக் காரணமாக அமைந்தது என அவர் விமர்சித்தார்.

அதேசமயம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான சிஎன்என் கருத்துக்கணிப்பில் 87 சதவீத அமெரிக்கர்கள் தரவு மையங்கள் அமைப்பது குறித்து ஆர்வத்தை விட கவலையே அதிகம் உள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

ஜி ஜின்பிங்

செயற்கை நுண்ணறிவுத் துறையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கூட்டுப் பாதுகாப்பு விதிகள்

செயற்கை நுண்ணறிவு அல்லது சூப்பர் இன்டெலிஜென்ஸ் துறையில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மற்ற போட்டியாளர்களை விட வெகுதூரம் முன்னணியில் உள்ளதாக டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளதாகவும், மூன்றாவது இடத்திற்கு யாரும் நெருக்கத்தில் கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இத்துறையில் கூட்டுப் பாதுகாப்பு விதிகளை உருவாக்கத் தானும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

எனினும் அந்தப் பாதுகாப்பு விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க கிளவுட் நிறுவனங்களின் சர்வதேச செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்

சீனாவுடனான தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய அமெரிக்க கிளவுட் நிறுவனங்கள் வெளிநாட்டுத் தரவு பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்ற சர்வதேச தரவு மையங்களை நம்பியுள்ளன.

வெளிநாட்டுப் பயனர்களுக்கு வேகமான சேவையை வழங்கவும் அவை அவசியமாக உள்ள நிலையில், புதிய வரி அச்சுறுத்தல் அந்நிறுவனங்களின் செயல்பாடுகளை சிக்கலாக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT