Loading...
ChatGPT-ல் 'லைவ் டிக்டேஷன்' புதிய வசதி அறிமுகம்: இனி பேசும்போதே உடனுக்குடன் எழுத்துக்களாக மாறும்
'லைவ் டிக்டேஷன்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ChatGPT

ChatGPT-ல் 'லைவ் டிக்டேஷன்' புதிய வசதி அறிமுகம்: இனி பேசும்போதே உடனுக்குடன் எழுத்துக்களாக மாறும்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2026
11:29 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான OpenAI, தனது ChatGPT சேவையில் 'லைவ் டிக்டேஷன்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்காமல், அவர்கள் பேசப் பேச உடனுக்குடன் குரல் பதிவுகள் எழுத்துக்களாக மாற்றப்படும். மேலும், குரல் பதிவிற்கான 10 நிமிட கால வரம்பையும் OpenAI முழுமையாக நீக்கியுள்ளது. இந்த புதிய வசதி இணையதளம், டெஸ்க்டாப் செயலி, iOS மற்றும் Android ஆகிய அனைத்துத் தளங்களிலும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அடுத்த கட்ட நகர்வு

மனிதர்களை போலவே உரையாடும் AI

மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் இடையிலான உரையாடலை மிகவும் இயல்பானதாக மாற்றும் OpenAI-ன் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் OpenAI அறிமுகப்படுத்திய 'GPT-Live-1' குரல் மாதிரி, மனிதர்களைப் போலவே இயல்பான சிரிப்பு மற்றும் வாக்கியங்களுக்கு இடையிலான இடைவெளிகளை பின்பற்றிப் பேசும் திறன் கொண்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது 'லைவ் டிக்டேஷன்' வசதி இணைக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் ஆடியோ நிறுவனமான ஜாப்ரா மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இணைந்து 2025-ல் நடத்திய ஆய்வில், எழுத்து வடிவக் கட்டளைகளை விடக் குரல் கட்டளைகளை பயன்படுத்தும்போது AI மீதான பயனர்களின் நம்பிக்கை சராசரியாக 33% அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் பயனர்கள் தனிப்பட்ட தகவல்களை அதிகமாகப் பகிரும் வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆடியோ தரவு

உங்கள் குரல் பதிவுகள் AI பயிற்சிக்கு பயன்படுத்தப்படுமா?

லைவ் டிக்டேஷன் மூலம் பெறப்படும் ஆடியோ தரவுகளை தனது AI மாதிரிகளை மேம்படுத்தப் பயன்படுத்தக்கூடும் என OpenAI தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தனிநபர் பயனர்கள் தங்களது ஆடியோ தரவுகளைப் பகிர அனுமதித்திருந்தால், டிக்டேஷன் ஆடியோக்கள் AI பயிற்சிக்கு பயன்படுத்தப்படலாம்.

ChatGPT செயலியில் Settings பகுதிக்குச் சென்று, "Improve the model for everyone" என்ற விருப்பத்தை Off செய்வதன் மூலம் உங்கள் குரல் தரவுகள் பகிரப்படுவதைத் தடுக்கலாம்.

நேர வரம்பு நீக்கப்பட்டு, உடனுக்குடன் டைப் செய்யும் வசதி வந்துள்ளதால், நீண்ட கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை உருவாக்குவோருக்கு இந்த 'லைவ் டிக்டேஷன்' அம்சம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

ADVERTISEMENT