Loading...
இன்றும் தங்கம் விலை குறைவு; நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றும் தங்கம் விலை குறைவு; நகை வாங்க இதுதான் சரியான நேரமா?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
10:46 am

செய்தி முன்னோட்டம்

தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று மேலும் சரிந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (நவம்பர் 21), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹45 குறைந்து ₹11,465 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹360 குறைந்து ₹91,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹49 குறைந்து ₹12,508 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹392 குறைந்து ₹1,00,064 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹39 குறைந்து ₹9,381 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹312 குறைந்து ₹75,048 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹175.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,75,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT