Loading...
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் சர்ச்சை: அரசு விதிகள் மீறப்பட்டதாக ஊடக அறிக்கையில் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் சர்ச்சை: அரசு விதிகள் மீறப்பட்டதாக ஊடக அறிக்கையில் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தின் புதிய கட்டுமானத்திற்கான டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கட்டாய மின்-டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், பொதுவெளியில் டெண்டர் கோரப்படுவதற்கு முன்பே இடிப்பு பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை வாக்குறுதியும் எழுந்துள்ள கேள்விகளும்

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை முதன்மை சீர்திருத்தமாக முன்னிறுத்தியது.

நிதியமைச்சர் மரிய வில்சன் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தில், ஒப்பந்தப் புள்ளிகளில் நிலவும் கூட்டு முறையை ஒழிப்பதற்கும், ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கும் பகிரங்க டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்த சூழலில், முதலமைச்சரின் புதிய அலுவலக டெண்டர் தொடர்பான புகார்கள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

மின்-டெண்டர்

மின்-டெண்டர் பதிவேற்றத்தில் தாமதம்

அறிக்கையின்படி, பொதுப்பணித்துறை கட்டிடப் பிரிவு ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெண்டர் அறிவிப்புகளை வெளியிட்டு, செப்டம்பர் 1-க்குள் விண்ணப்பிக்கக் காலக்கெடு விதித்தது.

இருப்பினும், கட்டாய விதியான மின்-டெண்டர் இணையதளத்தில் இந்த அறிவிப்புகள் உடனடியாகப் பதிவேற்றப்படவில்லை.

இதுகுறித்து ஆகஸ்ட் 17 அன்று பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆர். செல்வராஜிடம் ஊடகம் தரப்பில் கேட்கப்பட்ட பிறகே, இணையதளத்தில் டெண்டர் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 12 முதல் 17 வரை பிற 135 டெண்டர்கள் பதிவேற்றப்பட்ட நிலையில், முதலமைச்சர் அலுவலக டெண்டர் மட்டும் தாமதப்படுத்தப்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

வெளிப்படைத்தன்மை இன்மை

திட்ட மதிப்பில் வெளிப்படைத்தன்மை இன்மை

அச்சு ஊடகத்தில் வெளியான டெண்டர் அறிவிப்பில் இத்திட்டத்தின் மதிப்பு ₹5.54 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், ஆன்லைன் டெண்டர் ஆவணங்களில் தொகை குறிப்பிடும் பகுதி "NA" என நிரப்பப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

TVK அரசின் 100-வது நாள் நிறைவின் போது வெளியாகியுள்ள இந்த டெண்டர் சர்ச்சை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT