நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரர் மற்றும் சகோதரி ஒரே நாளில் மரணம்
இயக்குனர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நாடகங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரின் சகோதரியான வளர்மதி கடந்த ஜூன் 23ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது. சென்னை எம்.எம்.கே. பகுதியில் உள்ள வீட்டில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது. சகோதரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட் அவர்களின் சகோதரரான ரங்கநாதன் சென்னை வந்துள்ளார் என்று தெரிகிறது. அறந்தாங்கியில் இருந்து இந்த இறுதி சடங்கில் பங்கேற்க வந்துள்ளார்.
சகோதரியின் உடலை பார்த்து கதறி அழுத சகோதரர் ரங்கநாதன் மரணம்
சகோதரியின் உடலை பார்த்து கதறி அழுததில் அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது சகோதரி உடல் மீதே சாய்ந்து மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தினையடுத்து போஸ் வெங்கட் அவர்களின் சகோதரி உடலானது சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது சகோதரர் ரங்கநாதன் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு ஜூன் 24ம் தேதி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. போஸ் வெங்கட்டின் உறவினர்கள் மற்றும் திரையுலகினர் பலர் இந்த நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.