இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருவது சந்தேகம்? ஐசிசி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அணியை அனுப்புவது இன்னும் ஊசலாட்டமாகவே உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்து, அது ஹைபிரிட் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் ஹைபிரிட் முறைக்கு பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட தங்கள் நாட்டு அணி இந்தியாவுக்கு செல்லக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் இறுதி முடிவு அரசிடமே உள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் அரசு ஏற்கனவே இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
icc responds pcb participation
இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடும் என நம்பும் ஐசிசி
முன்னதாக, வரைவு அட்டவணை மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கிய எந்த பரிந்துரையையும் ஐசிசி மற்றும் பிசிசிஐ ஏற்கவில்லை.
இந்நிலையில், அறிவிப்பு வெளியான உடனேயே, ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்பது அரசாங்கத்தின் அனுமதிக்கு உட்பட்டது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியது.
இந்தியா செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அரசாங்கம் இதுவரை எந்த என்ஓசியும் வழங்கவில்லை. எனினும் இன்னும் அதிக காலம் இருப்பதால் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்பதற்கான பங்கேற்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐசிசி, நிச்சம் பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.