21 Jun 2023

"பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி

ஐநா சபையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா இந்தியாவில் உருவானது என்றாலும், அதற்கு பதிப்புரிமையும் காப்புரிமையும் கிடையாது என்று கூறினார்.

நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்கான போட்டி மைதானங்களை மாற்றக்கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த பரிந்துரைகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி 

கோவா மாநிலத்தில் ஜூன் 19ம் தேதி முதல் நாளை(ஜூன்.,22) வரை ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடக்கிறது.

ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சவூதி புரோ லீக்கில் இணைந்தார் பிரான்ஸ் கால்பந்து வீரர் என்'கோலோ காண்டே

பிரான்ஸின் உலகக் கோப்பை வென்ற மிட்ஃபீல்டர் என்'கோலோ காண்டே சவூதி புரோ லீக் சாம்பியன் அல் இத்திஹாட்டில் இணைந்துள்ளார் என்று கால்பந்து கிளப் புதன்கிழமை (ஜூன் 21) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள் 

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டில் சென்னை மண்டல அகழாய்வு சார்பில் மத்திய தொல்லியல் துறை 2ம் கட்ட அகழாய்வினை தற்போது நடத்தி வருகிறது.

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக மொழியான 'இசை'யின் தினம் இன்று 

உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு 

நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாள் நாளை(ஜூன்.,22) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நடிகர் விஜய்யின் பெயரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை?

இந்தியாவில் தங்களுடைய மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையில் உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ (Lossless Audio) வசதியை அளிக்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஸ்பாட்டிஃபை.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தின் மேல் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது இதன் காரணமாக,

இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 20) 36ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 92ஆக அதிகரித்துள்ளது.

புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா

தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக பழம்பெரும் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா அறிவித்துள்ளார்.

மீண்டும் இந்தியாவில் தொடங்கப்படுகிறதா எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை?

அமெரிக்காவில் பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று எலான் மஸ்க்கைச் சந்தித்திருக்கிறார்.

வாகன வேக கட்டுப்பாடு வரம்புக்கு இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்துத்துறை 

தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை 

"இஸ்லாமிய அடையாளச் சிதைவை" தடுப்பதற்காக 'ஹோலி' கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA

சமீப காலங்களில் அரசு வழங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டமாக மட்டுமல்லாமல் முதலீட்டுத் தேர்வாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் அளித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சை தீர்க்கப்பட்டாலும், இது பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டத்திலிருந்து பின்வாங்கும் யமஹா

ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நியோ'ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மறுவடிவம் செய்து வெளியிட இருப்பதாக கடந்த வருடம் யமஹா நிறுவனம் அறிவித்திருந்தது.

சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும் 

2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட கோளாறு: சரிசெய்யப்பட்டதாக ட்வீட் செய்திருக்கும் கூகுள்

வாட்ஸ்அப் செயலியானது பயனர்களின் அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை உபயோகிப்பதாக கடந்த மாதம் ட்விட்டரில் சில பயனர்கள் பதிவிட்டிருந்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, காரணம் என்ன?

ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு 

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜூன்-7ம் தேதி சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம் 

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 5,329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.

எமெர்ஜிங் டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் யு-23 அணி

ஹாங்காங்கில் நடந்த மகளிர் எமெர்ஜிங் கிரிக்கெட் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் புதன்கிழமை (ஜூன் 21) வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், யு-23 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது.

சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 21) ஒத்திவைத்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023க்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம்

இந்தியாவில் ஷார்ட் வீடியோக்களுக்கான பிரதானத் தளமாகிவிட்டது இன்ஸ்டாகிராம். 2020-ம் ஆண்டு வரை இந்தியாவின் முன்னணி ஷார்ட் வீடியோ தளமாக விளங்கி வந்தது டிக்டாக்.

இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு 

சர்வதேச யோகா தினத்தினை கடந்த 2014ம்ஆண்டு முதன்முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஐநா.,வில் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன?

மாருதி சுஸூகி நிறுவனமானது சமீபத்தில் தான் ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு புதிய மாடல் கார்களை இந்தியாவில் வெளியிட்டது.

ஆஷஸ் 2023 : 75 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வென்ற ஆஸ்திரேலியா

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கடைசி நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

அறுவை சிகிச்சை நிறைவு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது

தமிழக அமைச்சரும் திமுக தலைவருமான செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன்.

'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இன்று(ஜூன் 21) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் நாள் (இன்று) உலக மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

"மோடியின் ரசிகன் நான்", பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் புகழாரம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்தித்திருக்கிறார்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

20 Jun 2023

ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

விருதுநகர் மாவட்டம் அரசக்குளம் பகுதியினை சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்

பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின் 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

"இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது இப்படித்தான்" : முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் பூபிந்தர் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன் என போற்றப்படும் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகத் தொடங்கியபோது, அவரது வாரிசாக விராட் கோலி விரைவில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் உயர்த்தப்பட்டார்.

மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் சதமடித்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய யு-19 வீரர் அர்ஷின் குல்கர்னி

இந்திய யு-19 கிரிக்கெட் வீரரான அர்ஷின் குல்கர்னி மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன்.,14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தமிழக வானிலை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.

விஜய் நடிக்கும் லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.

ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட் 

சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ டேட், அவரது சகோதரர் ட்ரிஸ்டன் டேட், மற்றும் இரண்டு ரோமானிய பெண்கள் ஆகியோர் ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 3ம் இடத்திற்கு முன்னேறிய சாத்விக் & சிராக் ஜோடி

செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில், இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 

தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டுவந்தது.

27 வயதிலேயே டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீராங்கனை அனெட் கொன்டவீட்

உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அனெட் கொன்டவீட், வரும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்': படப்பிடிப்பை நிறைவு செய்தார் சிவராஜ்குமார்

கோலிவுட்: 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம் 

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'ஆதிபுருஷ்'.

மூன்று நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு சாதனையை அர்ப்பணித்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர்

புவனேஸ்வரில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், தஜிந்தர்பால் சிங் டூர் குண்டு எறிதலில் 21.77 மீட்டர் தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையை படைத்ததோடு, ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 19) 63ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 36ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவ தொடங்கிய பிறகு இன்று தான் மிக குறைவான வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நந்தன் நிலகேனி, தான் கல்வி பயின்ற பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

ஆஷஸ் 2023 : 18 ஆண்டு கால ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிநாளை எட்டியுள்ளது.

புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப், என்னென்ன வசதிகள்?

வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்கள் பயனர்களின் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் பேருந்து-ஆட்டோ மோதியதில் 7 பள்ளி மாணவர்கள் காயம் 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புஸ்லி வீதி என்னும் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளது.

CNG வசதியுடனும் வெளியாகிறதா டாடா 'கர்வ்'?

டாடா மோட்டார்ஸின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியான 'கர்வ்' (Curvv) மாடலானது பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாக் ஆகிய இரண்டு வகையான பவர்ட்ரெயின் ஆப்ஷன்களையும் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன 

நாளை(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், யோகா செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்காலம்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 

தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.

அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயம்

அமெரிக்காவில் வடக்கு அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.

புதிய 'ஹைலைட்ஸ் டேப்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனமானது ட்விட்டர் பயனர்களுக்காக புதிதாக 'ஹைலைட்ஸ் டேப்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஹைலைட்டஸ் வசதியில் கொஞ்சம் மாற்றம் செய்து ஹைலைட்ஸ் டேபாக வெளியிட்டிருக்கிறது ட்விட்டர்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் காட்டூரில் உள்ள தயாளுஅம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது.

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி

ஒடிஷாவில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வரும் ஜூன் 24 வரை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண் 

'மகதீரா', 'RRR' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளயடித்த நடிகர் ராம் சரணுக்கு இன்று(ஜூன் 20) பெண் குழந்தை பிறந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது 

ஒடிசாவின் புனித ஜெகநாதர் ரத யாத்திரை இன்று(ஜூன் 20) கோலாகலமாக தொடங்கியது.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?

இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி திங்களன்று (ஜூன் 19), சீனாவின் வுக்ஸியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான சேபர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜூன்.,20)சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன?

ஆட்டோ உலகில் தற்போதைய வாடிக்கையாளர்களின் தேர்வு எஸ்யூவிக்கள் தான். இந்தியாவில் வெளியாகும் அல்லது அப்டேட் செய்யப்படும் எஸ்யூவிக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான்

மொபைல் இயங்குதளங்களுக்கான சந்தையில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களே போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை(ஜூன் 21) அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ

ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து 

இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள இன்று(ஜூன் 20) அமெரிக்கா புறப்பட்டார்.