எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா
எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவில் விளையாடுகிறது. பெங்களூருவில் பாகிஸ்தான் வீரர்கள் தரையிறங்கியதில் இருந்து அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய காவல்துறை, வீரர்கள் என்று சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்.
எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டி விபரம்
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றன. மேலும் நட்பு ரீதியில் குவைத் மற்றும் லெபனான் அணிகளும் இதில் பங்கேற்கின்றன. 15 போட்டிகள் கொண்ட தொடர் பெங்களூருவில் உள்ள ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும். இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில் நடைபெறும். புதன்கிழமை (ஜூன் 21) மாலை 3.30 மணிக்கு தொடங்கியுள்ள தொடக்க போட்டியில் குவைத் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்திய அணி பாகிஸ்தான், நேபாளம் மற்றும் குவைத்துடன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில், பி பிரிவில் லெபனான், வங்கதேசம், பூட்டான் மற்றும் மாலத்தீவு அணிகள் இடம் பெற்றுள்ளன.