
புதுச்சேரியில் பேருந்து-ஆட்டோ மோதியதில் 7 பள்ளி மாணவர்கள் காயம்
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புஸ்லி வீதி என்னும் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளது.
குழந்தைகளை ஏற்றிச்சென்ற இந்த ஆட்டோ பேருந்துமீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்த 2 முதல் 5ம்வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் 7 பேர் காயம் அடைந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.
நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
இதன் முதற்கட்ட விசாரணையில், பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் விபத்து நேர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி
#JUSTIN புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி #Puducherry #CCTV #News18TamilNadu
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 20, 2023
| https://t.co/7dpn9FD15R pic.twitter.com/XflwcDVMD4