இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.
இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இருநாடுகளுக்கிடையே F-414 ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகவிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் F-414 ரக ஜெட் இன்ஜின்களை முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உதவிகளைச் செய்யவிருக்கிறது அமெரிக்கா.
இந்த புதிய இன்ஜினையே அடுத்து இந்தியா உருவாக்கவிருக்கும் 'தேஜஸ் மார்க் II' போர் விமானத்தில் பயன்படுத்தவிருக்கிறார்கள்.
இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில், ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் லிமிடட் ஆகிய நிறுவனங்களுக்கிடைய நாளை கையெழுத்தாகவிருக்கிறது.
ராணுவம்
உள்நாட்டில் தயாரிக்கப்படவிருக்கும் போர் விமானங்கள்:
மேற்கூறிய புதிய ஜெட் இன்ஜினானது தேஜஸ் போர் விமானத்தில் மட்டுமின்றி, AMCA-1 மற்றும் TEDBF ஆகிய போர் விமானங்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
GE-414 இன்ஜினை முழுவதுமாக ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட் (HAL) நிறுவனமே தயாரிக்கவிருக்கும் நிலையில், அதனைப் பயன்படுத்தி தேஜஸ் போர் விமானங்களை இந்தியாவின் ஏரோனாட்டிக்கல் டெவலப்மண்ட் ஏஜென்சி (ADA) நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
2024-ம் ஆண்டில் தேஜஸ் மார்க் II விமானத்தின் முன்மாதிரியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ADA. அதனைத் தொடர்ந்து 2027-28ல் மேற்கூறிய விமானத்தின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்படவிருக்கும் போர் விமானங்களுக்காக 500 புதிய ஜெட் இன்ஜின்களை HAL நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குகள் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.