தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், கரூர், அரியலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.